சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில்வாய்ப்பை இழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் நிலவும் பொருளாதார பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாகும். உலக வர்த்தக சந்தையில் எண்ணெயின் விலை குறைவடைந்தமை மற்றும் அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள் என்பன பொருளாதார பிரச்சினைக்கு பாரியளவில் தாக்கம் செலுத்துகின்றன.
இந்நிலை காரணமாக சவுதியில் சில நிறுவனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பளம் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக நேர கொடுப்பனவை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களில் பல மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அங்கிருந்த வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அவற்றில் பணியாற்றிய ஊழியர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபபடுகின்றன. எனவே முகவர் நிலையங்களினூடாக சவுதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்பை நாடி செல்ல முயற்சிப்போர் ஆராய்ந்து பார்த்து செயற்படுவது நன்மை பயக்கும்.
வேலைத்தளம்