ஜோர்தானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு

விஸா இன்றி சட்டவிரோதமான முறையில் தமது நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஜோர்தானினால் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக ஜோர்தானினால் அறிவிக்கப்படும் இரண்டாவது பொதுமன்னிப்பு காலம் இதுவாகும்.

செப்டம்பர் 22ஆம் திகதி முதல் நவம்பர் முதலாம் திகதிவரை இரண்டு மாத காலங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜோர்தானில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கை தொழிலாளர்கள், குறித்த காலப்பகுதியில், எந்தவித கொடுப்பனவுகளையும் செலுத்தாமல், நாடுதிரும்ப முடியும்.

இதேநேரம், சுற்றுலா விசாவில் சென்று, விசா காலம் நிறைவடைந்த பின்னரும் ஜோர்தானில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், அதற்கான அபராதப் பணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435