
சவூதி அரேபியாவில் நிர்க்கதியான நிலையில் நலன்புரி நிலையத்தில் தங்கி இருக்கும் இலங்கைப் பணிப் பெண்களின் பிரச்சினை தொடர்பில் ஒருவாரத்துக்குள் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
சவூதியில் இலங்கைப் பெண்கள் சிலர் நலன்புரி நிலையத்தில் நிர்க்கதியான நிலையில் இருப்பது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆட்கடத்தல்களில் ஈடுபடும் முகவர் நிறுவனங்களை நிரந்தரமாக தடைசெய்யும் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.