சவுதியில் பல நகரங்களில் 24 மணிநேர ஊரடங்கு உத்தரவு

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில 24 மணி ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.

ரியாத், டாபுக், தம்மாம், தஹ்ரான், அல் ஹொவுவ், ஜெத்தாஹ்,டைவ், அல் குவாடிவ் மற்றும் அல் கொஹ்பார் ஆகிய பிரதேசங்களில் 24 மணிநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என சவுதி ப்ரஸ் எஜன்ஸி அந்நாட்டு உள்ளவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி செய்தி வௌியிட்டுள்ளது

கடந்த திங்கட் கிழமை 4 கொவிட் 19 தொற்றுள்ள நபர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து 24 மணி ​நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று காரணமாக அந்நாட்டில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை 2,523 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை, ஜெத்தாவுக்கு அருகாமையில் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புனித நகரங்களான மக்கா, மதீனாவில் மீளறிவிப்பு வரை 24 மணி நேர ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435