
தொழில் வாய்ப்பை நாடி சவுதி அரேபியாவிற்கு செல்லுமுன்னர் நன்கு யோசனை செய்து தகவல்கள் அறிந்து செல்லவேண்டும் என்று சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம் தெரிவித்துள்ளார்.
சரியான முறையில் விபரங்கள் அறியாமல், விஸா பெற்றுகொள்ளாமல் சவுதி வரும் இலங்கையர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
இலங்கையில் இருந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சவுதி அரேபியாவிற்கு தொழில் நாடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்ற வருபவர்கள். வெளிநாட்டுக்கு வருவதற்கு முன்னர் நாட்டின் சட்ட திட்டங்கள், தொழில் செய்யவுள்ள நிறுவனத்தின் தன்மை, நிறுவனத்திற்கும் தொழில் வழங்குநருக்குமான உறவு என பல விடயங்கள் தொடர்பில் மக்கள் ஆராய்ந்து பார்த்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் தமாம் நகரில் கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் இலங்கையர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர் என்றும் அவர்கள் உண்ண உணவு கூட இன்றி துன்பப்பட்டனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்