ஐக்கிய அரபு இராச்சயத்தில் தற்போது நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் புதிய மாற்றங்களை கொண்டு வர அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தெரிவு செய்யப்பட்ட பிரதான பிரிவுகள் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
குறிப்பாக அலுவலக நேரங்களில் அதிக வாகன நெரிசல் காணப்படுகின்றமையினால் மாற்று வீதிகளை அடையாளங்கண்டு அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதை ஒழுங்குபடுத்தல், பழைய வாகன பதிவுபத்திர ஒழுங்குப்படுத்தல், என்ஜின் பதிவுக்கான கட்டணம், வருடாந்தம் பயன்படுத்தப்படும் எரிபொருள் மற்றும் பயணிக்கும் தூரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தல், வாகனம் புதுப்பிக்கப்பட்டதன் பின்னர் செலவாகும் பதிவுக் கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல் என்பன அம்மாற்றங்களில் பிரதானமானவையாகும்.
மேலும் அந்நாட்டில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தல், வாடகை வாகன சந்தையை அபிவிருத்தி செய்தல், பாடசாலை மற்றும் காரியாலய ஆரம்ப நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளினூடாகவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி எரிபொருள் விரயத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.