புலமைபரிசிலுக்காக 56 மில் ரூபா நிதியொதுக்கீடு

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையருடைய பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்குவதற்காக 56 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 869 பிள்ளைகளுக்கு தலா 15,000 ரூபா வீதமும் க.பொ.சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 1,652 பேருக்கு தலா 20,000 ரூபா விதமும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய 364 பிள்ளைகளுக்கு 364 பேருக்கு தலா 30,000 ரூபா வீதமுமாக 2,885 மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்குவதற்காக இந்நிதியொதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் பெற்றோருடைய பிள்ளைகளுக்கு கல்வியுதவி வழங்கும் நோக்கில் கடந்த 1996ம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இப்புலமைபரிசில் திட்டத்தினூடாக இதுவரை மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாணவர்களே அதிகமாக புலமைபரிசிலை பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 307 மாணவர்கள் இப்புலமைபரிசிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435