சுமார் 10,000 அமெ.டொ பெறுமதியான தபால் பொதிகளை திருடிய இலங்கையர்

சுமார் 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தபால் பொதிகளை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் அந்நாட்டு நீதிமன்றினால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார்.

அவுஸ்த்திலேியாவின் போர்ட்ஸா, ரோஸ்பட், ரை, சொரெண்டோ மற்றும் டூட்கரூக் ஆகிய பிரதேசங்களில் தபால் பொதிகள் காணாமல் போனமை கண்டறிந்ததையடுத்து அந்நாட்டு தபால் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய விசாரணைகளில் குறித்த நபரின் புறநகர் மெல்போர்ன் வீட்டில் இருந்து சுமார் பத்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான தபால் பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.

ஓகஸ்ட்- ஒக்டோபர் காலப்பகுதிகளில் இத்திருட்டு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

24 வயதான சந்தேகநபரின் மவுண்ட் வேவர்லி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 64 பொதிகள் கைப்பற்றப்பட்டன. பெறுமதியான காலணிகள், உடற்பயிற்சி சாதனங்கள், வீட்டுப்பொருட்கள், சமையலறைப் பொருட்கள், மதுபான வகைகள், விளையாட்டுப் பொருட்கள் உட்பட பல பொருட்கள் அப்பொதிகளில் இருந்தமை தெரியவந்துள்ளது.
அவரது புறநகர் மெல்போர்ன் வீட்டில் 10,000 டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்ததை

குற்றவியல் திருட்டு மற்றும் தபால் திருட்டு ஆகிய குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற குறித்த நபர் எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி ப்ரான்ங்ஸ்டன் நீதிமன்றில் ஆஜர் ஆவதற்கான ஜாமினை தற்போது பெற்றுள்ளார்.

உரியவர்களுக்கு பொதிகளை மீள வழங்கும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். முடக்கக் காலப்பகுதியில் தனது பேரன் விளையாடுவதற்காக வாங்கியனுப்பிய காற்பந்து விளையாட்டுத் தொகுதி மீள கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார் முதிய பெண்மணியொருவர்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435