சுரக்ஷா பாதுகாப்பு இல்லத்திற்கு இலங்கை வீட்டுப் பணிப்பெண்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குவைத்துக்கான இலங்கை தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாதுகாப்பு இல்லத்தில் நீண்டகாலமாக தங்கியிருக்கும் 160 பேரில் பெரும்பாலானவர்கள் கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையின் கீழ் அவ்வில்லத்தில் மேலதிகமானவர்களை தங்க வைப்பதற்கான இடவசதிகள் இல்லாமையினால் வீட்டுப் பணிப்பெண்களுக்கு தங்குமிட வசதிகள் வழங்குவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் எதிர்காலத்தில் வீட்டுப் பணிப்பெண்கள் பொறுப்பேற்கப்படமாட்டார்கள் என்றும் இதனால் தமது சேவையிடங்களில் பிரச்சினைகள் ஏற்படின் தூதரகத்திற்கு வருவதை தவிர்த்து தொலைபேசியூடாக தூதரகம் அல்லது வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை தொடர்புகொண்டு தமது பிரச்சினை தீர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தூதரகம் அவசர சேவைக்காக இன்று (18)பாதியளவு திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.