சேவை அனுமதிபத்திரம் பெற ஒரு மாதம் வழங்கவுள்ள கட்டார் அரசு

புலம்பெயர் தொடர்பான புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ள கட்டார் அரசு அதனூடாக தொழிலாளர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களையும் வழங்க தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு இணையதளமான கட்டார் லிவின் செய்தி வௌியிட்டுள்ளது.

அடுத்த மாதம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டத்திற்கமைவாக நாட்டில் பணியாற்ற வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமக்கான தொழில் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் தொழில் அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கு 7 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தமை கருத்திற் கொள்ளத்தக்கது.

இதேவேளை, குறித்த குறித்த அனுமதிப்பத்திரம் காலாவதியாவதற்கு முன்னரே பணியாற்றும் தொழில் வழங்குனரிடமிருந்த வேறு ஒரு தொழில் வழங்குனருடன் இணைவதற்கான அனுமதியை நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சிடம் பெற்றுக்கொள்ள முடியும் என்று திணைக்கள பணிப்பாளர் பிரிகேடியர் அப்துல்லா ஜாபிர் அல் லிப்டா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சேவைக்காலம் முடிந்த பின்னர் அல்லது 5 வருடம் பூர்த்தியடைந்த பின்னர் குறித்த இடத்தில் இருந்து வேறு தொழில்நிறுவனங்களுக்கு மாற்றல் வழங்க அமைச்சு அனுமதி வழங்கும்.

புலம்பெயர் தொழிலாளர்களை பணியில் இணைக்கும் போது ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சின் அனுமதிக்கமைவாக ஊழியருக்கு தற்காலிக இடமாற்றம் பெற்றுக்கொள்ள உரிமையுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்ட வரைபுக்குள் வராத கூட்டுத்தாபனங்களின் ஊழியர்களுக்கு தமது உரிமை மீறலை உறுதிபடுத்தி இடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435