ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாககூறி மோசடியில் ஈடுப்பட்ட பெண் கைது

ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாககூறி மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமையவே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு 6 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றையும் நடத்திச் சென்றுள்ளார் என்றும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435