ஹமாட் விமானநிலையத்தில் இலவசமாக போய்வரலாம்

கட்டார் ஹமாட் சர்வதேச விமானநிலையமூடாக உட்செல்லல் மற்றும் வெளியேறுதலுக்கு இலத்திரனியல் வாயில்களை உருவாக்க கட்டார் உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

கட்டாரில் தற்போது பணியாற்றும் மற்றும் வசிக்கும் பதிவு அடையாள அட்டையுள்ள வெளிநாட்டினர் மற்றும் அவர்களுடைய 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அடிப்படை பதிவின்றி பயன்படுத்தும் வகையில் இந்த இலத்திரனியல் நுழைவாயில்கள் அமைக்கப்படவுள்ளதாக உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விலத்திரனியல் நுழைவாயில்களினூடாக மிக இலகுவாக போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் தேவையற்ற சனநெருக்கடியைக் குறைக்க ஏதுவாக அமையும் என்று கட்டார் உள்விவகார அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்திட்டம் தொடர்பில் ஹமாட் சர்வதேச விமான நிலைய அனுமதிபத்திர திணைக்கள பணிப்பாளர் கர்னல் மொஹமட் ரசீத் அல் – மஸ்ருய் (Mohamed Rashid al-Mazroui) கருத்து தெரிவிக்கையில், பதிவு அடையாள அட்டை இருப்பின் எவ்வித பதிவு மற்றும் கட்டணம் இன்றி விமான நிலையத்திற்குள் உட்செல்லவோ வெளியேறவோ முடியும் என்றும் அதற்காக ஈ வாயில் இல 19 உட்செல்வதற்கும் ஈ வாயில் இல 16 வெளியேறுவதற்கும் பயன்படுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உட்செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் விரைவாக செல்வதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த திணைக்கள பணிப்பாளர், உட்செல்ல மற்றும் வெளியேற ஆகக்கூடியது 2 நிமிடங்கள் செலவாகும் என்றும் இப்புதிய முறையை பயணிகள் விளங்கிக்கொள்ளும் வகையில் அரபு மற்றும் ஆங்கில மொழியில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435