ஜப்பான் வீசாவுக்கான தனியான மத்திய நிலையம்

ஜப்பான் வீசா விண்ணப்பங்களை கையாள்வதற்கான தனியான மத்திய நிலையமொன்றை ஜப்பான் தூதரகம் நேற்று (18) திறந்துள்ளது.

கொழும்பு 3, கீதாஞ்சலி பிளேஸில் 41/1 என்ற முகவரியில் இப்புதிய வீசா மத்திய நிலையம் அமைந்துள்ளது.

இதேபோல், யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், காலி, புத்தளம், கட்டுநாயக்க, பேலியகொட மற்றும் இரத்மலானை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் புதிய வீசா மத்திய நிலையங்கள் அமைக்கப்பவுள்ளதாகவும் இனி ஜப்பான் தூதரகம் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்று தூதரகம் தெரிவித்துள்ளது

புதிய மத்திய நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனெச் சுஹனிமா, இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளின் விஜயம் அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடம் மட்டும் ஜப்பானுக்கு 20,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435