ஜேர்மனியில் சிக்கியிருந்த 235 இலங்கை பணியாளர்கள் நாடு திரும்பினர்

ஜேர்மனியில் சிக்கியிருந்த இலங்கை பணியாளர்கள் 235 பேர் இன்று (06) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜேர்மனியில் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக புறப்பட்டுச் சென்றிருந்தபோது, கொரோனா தொற்று நோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், அந்நாட்டில் சிக்கியிருந்த 235 பேரே  இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இந்த சிவில் கப்பல் பணியாளர்கள், ஜேர்மனியின் ஹெம்பர்க் நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1206 எனும் விசேட விமானம் மூலம் இன்று முற்பகல் 11.55 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகளும், விமானப் பணியாளர்களும், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435