புலம் பெயர் தொழிலாளரினூடாக பெறும் வருமானத்தில் வீழ்ச்சி

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் ஸ்தீரமற்ற நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர்களினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் அன்னிய செலாவணியினூடாக 556.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமும் கடந்த ஆண்டு 618.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமும் கிடைத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வருமானத்தில் 10 வீத வீழ்ச்சி காணப்படுவதாக மத்திய வாங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் 4503.3 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளபோதிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 வீத வீழ்ச்சி காணப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் வௌிநாட்டு இருப்பு பெருமானம் கடந்த ஓகஸ்ட் மாதமளவில் 7.7 அமெரிக்க டொலராக காணப்பட்டதாகவும் அத்தொகையானது நான்கரை மாதங்களுக்கான இறக்குமதிக்கு போதுமானதாக உள்ளதாகவும் மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435