டுபாயில் திருடிய குற்றச்சாட்டில் 7 வருடங்களின் பின்னர் இலங்கை பெண் கைது

டுபாய் பெண்ணிடம் 200,000 திர்ஹம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த இலங்கை பெண் ஏழு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மூன்று வைர மோதிரங்கள்,10 தங்க மோதிரங்கள், ஆறு தங்க காதணிகள், ஏழு விலை உயர்ந்த கடிகாரங்கள், ஆடை பைகள், காலணிகள், இரண்டு தொலைபேசிகள், அலங்காரம் பொருட்கள், உணவு மற்றும் 14,000 திர்ஹம் பணம் ஆகியவற்றை கடந்த 2010ஆம் ஆண்டு குறித்த பெண் திருடிக்கொண்டு நாடு திரும்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் இலங்கை பணிப்பெண் பணியாற்றிய சமயத்தில், அதன் வீட்டு எஜமானி, கடந்த 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது தாயாருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை உறவினர்களுடன் தொடர்பு கொண்ட பணிப்பெண் அங்கிருந்த பல பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இதற்காக வீட்டின் தொலைபேசியை பயன்படுத்தியமையால் பெருந்தொகை கட்டணம் வந்துள்ளன.

இதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட வீட்டு எஜமானி தான் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பியதும் இலங்கை பெண்ணின் விசாவை இரத்து செய்து விட்டு குறித்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி அவரை இலங்கைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஆராய்ந்த பார்த்த போது இலங்கைக்கு பொருட்கள் அனுப்பப்பட்ட பல கப்பல் ரசீதுகளை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஆராய்ந்து பார்த்த போது தனது நகைகள் உட்பட பல பொருட்கள் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டதால் பொலிஸில் முறைப்பாடு செய்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட 80 கிலோ உடை உட்பட பிற பொருட்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதனை அந்த நாட்டு பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் பணிப்பெண்ணாக மற்றொரு பணியை பெற்றுக் கொண்டு மீண்டும் இலங்கை பெண் ஐக்கிய அரபு எமிரேட்டிஸ் நாட்டிற்கு சென்ற போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதான குறித்த இலங்கை பெண் நீதிமன்றத்தில் திருட்டு குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இந்த நிலையில் வழக்கிற்கான தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435