டுபாயில் பணியாற்றும் சுமார் 1000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது அந்நாட்டிலுள்ள தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தர குழு. இப்பயிற்சிக் குழுவானது கடந்த ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட்டது.
தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தரகுழுவானது டுபாயிலுள்ள நான்கு அரச திணைக்களங்களுடன் இணைந்து தொழிலாளர் உரிமை, கடமை மற்றும் நாட்டின் சட்ட திட்டங்கள் என்பன தொடர்பில் இப்பயிற்சிகளை வழங்கியுள்ளது.
இக்குழவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஓபைட் முஹயிர் பின் சுரோர் தெரிவிக்கையில், நாம் டுபாயில் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்கியுள்ளோம். தொழிலாளர் உரிமையை பாதுகாக்கும் போது நாம் சர்வதேச தரத்தை அடைய முடிகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாணியாற்றும் ஊழியர்கள் எவரும் சுரண்டல்களுக்குள்ளாகவில்லை என்பதை எமது நிறுவகம் உறுப்படுத்துகிறது.
நாட்டின் சட்ட திட்டங்களை ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்கும் போது அவர்கள் சுரண்டல்களுக்குள்ளாகாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக அமைகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மத்திய கிழக்குபயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிலாளர் விவகாரங்களுக்கான நிரந்தர குழுவினால் நடத்தப்பட்ட மூன்று மொழிகளில் நடத்தப்பட்ட 13 செயலமர்வுகளில் சுமார் 1000 பேரை பயிற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் குறித்த பயிற்சியானது மிகவும் பயனுள்ளது என்று 90.57 தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் 87.57 பேர் இப்பயிற்சியின் உள்ள நன்மைகள் தொடர்பில் தமது சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர். அத்துடன் தமது உரிமை, கடமை தொடர்பான அறிவு மேம்பட்டுள்ளதாக 85 வீதமானோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/கல்ப் நியுஸ்