போக்குவரத்து விதியை மீறினால் வழங்கப்படும் தண்டனைகள்

டுபாயில் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் பாதுகாப்பு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து சட்டவிதிகளும் மீறினால் வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,

மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லவேண்டிய வீதிகளில் அதிக வேகத்தில் சென்றால் 3000 டிராம் அபராதத் தொகை விதிக்கப்படவுள்ளதுடன் சாரதி அனுமதி பத்திரத்தில் 25 புள்ளிகள் கழிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லவேண்டிய வீதிகளில் அதிக வேகத்தில் சென்றால் 2000 டிராம் அபராதமும், 12 புள்ளிகள் கழிக்கப்பட்டு 30 நாட்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லவேண்டிய கட்டுப்பாட்டை மிறி அதிக வேகத்தில் சென்றால் 1000 டிராமும், 40 கிலோ மீற்றர் எல்லையை மீறி சென்றால் 700 டிராமும் 30 கிலோ மீற்றர் கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் 600 டிராமும் 20 கிலோ மீற்றர் கட்டுப்பாட்டை மீறிச் சென்றால் 300 டிராமும் அபராதமாக விதிக்கப்படும்.

மது பயன்படுத்தி விட்டு வாகனம் ஓட்டினால் நீதிமன்ற தீர்ப்பினூடாக தண்டனை வழங்கப்படுவதுடன் அனுமதி பத்திரத்திலிருந்த 23 புள்ளிகள் கழிக்கப்பட்டு, 90 நாட்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

இலக்கத் தகடு இல்லாமல் வாகனம் பயன்படுத்தினால் 3000 எமிரேட்ஸ் டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 24 புள்ளிகள் கழிக்கப்படும்.

வாகன நெருக்கடி ஏற்படும் குற்றத்திற்கு 1000 டிராம் அபராதம் விதிக்கப்படும்.

சட்ட விரோதமாக வாகனம் ஓட்டப்படும் குற்றத்திற்கு 3000 டிராம் அபராதம் விதிக்கப்பட்டு அனுமதி பத்திரத்திலிருந்த 24 புள்ளிகளும் கழிக்கப்படும்.

வீதி சமிக்ஙைஞகளை மீறி சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்தாமல் செலுத்தினால் 1000 டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் அனுமதிபத்திரத்தின் புள்ளிகளில் 12 கழிக்கப்பட்டு 30 நாட்கள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்படும்.

வாகனம் செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தினால் 800 டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் சாரதி அனுமதி பத்திரத்தில் இருந்து நான்கு புள்ளிகளும் கழிக்கப்படும்.

போதனை பொருள் அல்லது அது போன்ற வேறு மருந்துகளை பயன்படுத்தி வாகனம் ஓட்டினால் சாரதி அனுமதி பத்திரத்தில் இருந்து 23 புள்ளிகள் கழிக்கப்படுவதுடன் 60 நாட்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

வாகன யன்னல்கள் அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கருமையாக இருப்பின் 1500 டிராம் அபராதம் விதிக்கப்படும். (50 வீதம் மட்டுமே கருமைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது)

விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினால் 2000 டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 60 நாட்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டும் போது பாதுகாப்பு பட்டிகளை அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ்விதி மீறப்படின் 400 ரூபா அபராதம் விதிக்கப்படுவதுடன் சாரதி அனுமதி பத்திரத்தில் இருந்து 4 புள்ளிகள் குறைக்கப்படும்.

குறிப்பிட்ட காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாவிடின் 500 டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 7 நாட்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்படும்.

பத்து வயதுக்கு குறைந்த அல்லது 145 சென்றி மீற்றருக்கு குறைந்த உயரமுடைய பிள்ளைகள் முன் பக்க ஆசனத்தில் அமர அனுமதிக்கும் குற்றத்திற்கு 400 டிராம் அபராதம் விதிக்கப்படுவதுடன் சாரதி அனுமதி பத்திரத்தில் இருந்து நான்கு புள்ளிகள் குறைக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435