தங்கும் விடுதிகளிலுள்ள புலம்பெயர் தொழிலார்களுக்கு சம்பளம்- சிங்கப்பூர்

கொவிட் 19 தொற்று காரணமாக தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள அனைத்து வௌிநாட்டு ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளம் வழங்கப்படும் என்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஜூராங் பகுதியில் உள்ள வெஸ்லைட் பாபன் தங்கும் விடுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த வௌிநாட்டு ஊழியர்களின் நலன்களை கேட்டறிந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர்களின் உணவு மற்றும் மருத்துவத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், ஒரே அறையில் அதிக நேரம் இருப்பது கடினம் ஆனால் ஊழியர்கள் அதனை புரிந்துகொண்டுள்ளனர் என்றும் நம்பிக்கை வௌியிட்டார்.

வெஸ்ட்லைட் பாபன் தங்கும் விடுதியில் தற்போது சுமார் 5,700 ஊழியர்கள் தங்கியுள்ளனர். இங்கு இதுவரை கொவிட்-19 சம்பவங்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேலும், சிங்கப்பூரில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் 1 வரை, அதாவது நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435