பிரான்ஸில் ‘ இடைநிறுத்த உரிமைச் சட்டம்’ அறிமுகம்

 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ‘இடைநிறுத்துவதற்கான உரிமை’ புதிய தொழிலாளர் சட்டத்தை பிரான்ஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைப்பளு, தொழில்நுட்பம் என்பவற்றின் காரணமாக வேலை நேரமல்லாத நேரங்களில் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பல ஊழியர்கள் முறைப்பாடுகள் செய்ததை கவனத்திற்கொண்டு இப்புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஐம்பது ஊழியர்களுக்கும் அதிகமாக உள்ள பிரான்ஸ் நிறுவனங்களில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்புதிய சட்டமானது ஊழியர்களின் சுதந்திரத்தைப் பேணுவதாக அமையும் என்கிறார் பிரான்ஸ் எயார்லைன் நிறுவன 50 வயதான பெயர் குறிப்பிட விருப்பான பெண் முகாமையாளர். ஓய்வு நேரங்களிலும் அவசரமான வேலைகள் வருவதாகவும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் தனக்கு போன்றே ஏனைய முகாமையாளர்களுக்கும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் இனி அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தான் பணிபுரியும் நிறுவனம் ஓய்வு நேரங்களில் பணிபுரியுமாறு நிர்பந்திக்காவிட்டாலும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நிறுவன ஊழியர் மத்தியில் இச்சட்டம் மிகவும் பிரபலமடைந்து காணப்படுவதாகவும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்வாழ்க்கைக்கு இடையில் இடைவௌியை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இச்சட்டம் பிரபலப்படுத்தபட்டு வருவதாகவும் கல்ப் நியுஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435