தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்துடன் 5 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறிவிடுவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அடுத்த வருடம் தொடக்கம் இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வரி விதிப்பினூடாக அந்நாட்டின் வாழ்க்கைச்செலவு 2.5 வீதத்தினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை செலவுகளுக்கும் 5 வீத வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பெற்றோர் மொத்தமாக சீருடைகள், பாடசாலை உபகரணங்கள் வாங்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.