தாமதிக்காது சேவை வழங்குக- அமைச்சர் தலத்தா

வௌிநாடு வேலைவாய்ப்பு பணிய சேவைகளை நாடி வருவோருக்கு அவர்களுடைய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து அனுப்புமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அதுகோரள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடமேல் மாகாண அலுவலகத்தை பார்வையிட சென்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோர் தமது சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்திற்கே வருகைத் தருகின்றனர். அது தவிர குருநாகல பிரதேத்தில் உள்ள வடமேல் மாகாண அலுவலகத்திற்கே அதிகமானோர் தமது சேவைகளுக்காக விஜயம் செய்கின்றனர். அவ்வாறு வரும் மக்களை அலைய விடாமல் உடனடியாக அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து அனுப்பு வேண்டும்.

மிக தூர பிரதேசங்களில் இருந்து வருவோரும் உள்ளனர். அவர்களுடைய தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அனுப்பவது அவசியம். இந்நாட்டுக்கு அதிகமாக எமது அமைச்சினூடாகவே வருமானம் கிடைக்கிறது. அவ்வறுமானத்தை பெற்றுகொடுப்போருக்கு நாம் சரியான சேவையை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435