தாய்வானுக்கு சென்ற 40 இலங்கை மாணவர்களுக்கு கோழிப் பண்ணையில் தொழில்

தாய்வானின் கென் நின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காகச் சென்ற இலங்கையைச் சேர்ந்த 40இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்;கு தாய்பே நகரில் கோழிப் பண்ணையில் தொழில்புரியும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு கல்வி அமைச்சு கண்டறிந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் தாய்வானுக்கு செல்லும் விடயத்தில் இலங்கையைச் சேர்ந்த முகவர்களும், அரச அதிகாரிகளும் தொடர்புபட்டுள்ளதாக தாய்வான் நியூஸ் முகவரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கிராமங்களுக்கு செல்லும் குறித்த நடமாடும் முகவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் கென் நின் பல்கலைக்கழக அதிகாரிகள், விமான பயணச் சீட்டுக்களைக் கொண்டுசென்று தாய்வானுக்கு செல்வார்களாயின் இலவசமாக கற்றல் நடவடிக்கையில்; ஈடுபட முடியும் எனத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கென் நின் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் மற்றும் முகவர் ஆகியோர் இணைந்து குறித்த இலங்கை மாணவர்களை கோழிப் பண்ணையில் சேவைக்கு அமர்த்தி குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கென் நின் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக 61 இலங்கை மாணவர்கள் தாய்வானுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435