கொவிட் 19 தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு வரியற்ற பொருட்கொள்வனவுக்கான வாய்ப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் G.A சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வழமையாக வௌிநாடுகளில் நாடு திரும்பும் இலங்கையர்கள் விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். எனினும் இந்தக் காலப்பகுதியில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அவர்களுக்கான வாய்ப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீப காலங்களில் சுமார் 13,000 இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நாளொன்று நூறு பேர் என்ற வகையில் தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளோம்.
அவ்வாறு பொருட்கொள்னவுக்காக வருபவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை பூர்த்தி செய்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சுகாதார அதிகாரிகளின் கடிதங்களை கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.