
குவைத்தில் இருக்கும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது பணி அனுமதியை (Work Permit) சம்பள சான்றுப்பத்திரம் (Salary Certificate) இல்லாமலேயே புதுப்பித்துக்கொள்ளலாம் என்று குவைத் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை ( Public Authority of Manpower ) செய்தி வெயிளியிட்டுள்ளது.
இந்த முடிவானது குவைத் நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் அல் அக்கீலின் உத்தரவுக்கிணங்க நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி , தனியார் துறை நிறுவனங்களின் கோப்புகளில் ( Files) பதிவு செய்யப்பட்டிருக்கும் ஊழியர்களின் பணி அனுமதி (Work Permit) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் சம்பள சானறுப்பத்திரம் இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையானது, கொரோனாவின் தாக்கத்தினால் தொழிலாளர் துறையில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரிசெய்யும் விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : குவைத் தமிழ் சோசியல் மீடியா