தொழிலாளர் உரிமையை பாதுகாக்கும் நிறுவனத்திற்கு தக்கீர் விருது

டுபாயில் தொழிலாளர் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களை தெரிவு செய்து வழங்கப்படும் தக்தீர் விருது வழங்கலில் கலந்துகொள்ள 9,854 தொழிற்சாலைகள் மற்றும், 282 நிறுவனங்கள் வரை கலந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள நிறுவனங்கள் மற்றும் நிர்மாணத்துறை நிறுவனங்கள் இவ்விருது வழங்கலில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக வதிவிட மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் முஹைர் பின் சொரூர் தெரிவித்தார்.

இரண்டாவது தடவையாக நடத்தப்படும் இவ்விருது வழங்கலில் ஆரம்பத்தில் சுதந்திர வர்த்தக வலய நிறுவனங்கள் உள்ளடக்கப்படவில்லை. இம்முறை அவை உள்ளடக்கப்படவுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விருதுக்காக டுபாயில் உள்ள 9,854 தொழிற்சாலைகளும் 282 மேற்பட்ட கட்டிட நிர்மாணத்துறை நிறுவனங்களும் கலந்துக்கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிராந்தியத்தில் உள்ள தொழிலாளர் நலன் மற்றும் உரிமை தொடர்பில் சர்வதேச மதிப்பை பெறுவதற்கு இவ்விருது வழங்கல் உதவியாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர் கட்டிட நிர்மாணத்துறையில் பணியாற்றுகின்றனர். இவ்விருதானது சர்வதேச நியமங்கள் மற்றும் தேசிய, சர்வதேச தரங்களுக்கமைய அவர்களின் உரிமையை உறுதி செய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435