ஐக்கிய அரபு இராச்சிய வெப்பநிலை இன்று 43 செல்சியஸ் பாகையாக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கிழக்கு மலைப்பிரதேசங்களில் ஓரளவுக்கு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவித்துள்ள அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அவ்வப்போது மணற்புயல் ஏற்படக்கூடும் என்றும் அதனால் மோட்டார் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டின் ஆகக்குறைந்த வெப்பநிலை 28 செல்சியஸ் பாகை என்றும் அவதான நிலையம் அறிவித்துள்ளது.