நகரங்கள் முடக்கப்பட முன்னர் இடம்மாற்றப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

குவைத்தில் உள்ள இரு கைத்தொழில் பிரதேசங்களைமுற்றாக முடக்கப்படுவதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அப்பிரதேசங்களை விட்டு வௌியேற்றப்பட்டுள்ளனர் என்று குவைத் செய்திப் பத்திரிகையான அல் குவாபாஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கு உலக நாடுளில் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் மஹ்பூலா மற்றும் ஜ்லீப் அல் ஷுயோக் ஆகிய கைத்தொழில் பிரதேசங்களில் பணியாற்றிய தொழிலாளர்களே இவ்வாறு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அரசாங்கத்தின் எந்தவித உத்தரவுமின்றி, அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படாமல் இவ்வாயிரக்கணக்கான தொழிலாளர்கள்பஸ்களில் ஏறிச் செல்வதைக் கண்டு அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் ஆச்சரியப்பட்டுள்ளனர் என்கிறது அப்பத்திரிகை செய்தி.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் இடப்பெயர்வு தொடர்பில் பாதுகாப்புப்படையினால் அப்பிரதேச தொழிற்சாலைகளில் விசாரணை நடத்தியதையடுத்து குறித்த பிரதேசங்கள் முற்றாக முடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதனால் தமது உற்பத்தி நடவடிக்கை பாதிக்காதிருக்க முன்னெச்சரிக்கையாக தொழிலாளர்கள் வேறிடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக உற்பத்திச் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பிரதேசங்களை விட்டு வௌியேறிய தொழிலாளர்கள் குறித்து சுகாதார அமைச்சின் உதவியுடன் தாம் கண்காணித்து வருவதாக உயர் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் அல் கண்டாரி தெரிவித்துள்ளார்.

அதிக வௌிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றும் குறித்த நகரங்களில் அதிக எண்ணிக்கையான கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகியதையடுத்து முழுமையாக முடக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்றுமுன்தினம் (6) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435