நன்னடத்தை சான்றிதழ் இல்லையேல் வீஸா இல்லை!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில் வீஸாவை பெறுவதானால் நன்னடத்தை சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்று அந்நாட்டு உயர் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தொடக்கம் இப்புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரவுள்ளது.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த நாட்டில் அல்லது ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக வசிக்கும் நாட்டில் இருந்து இந்நன்னடத்தை சான்றிதழை பெறுதல் வேண்டும். பெற்ற சான்றிதழை மாவட்டச் செயலகம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சு என்பவற்றில் உறுதிப்படுத்தல் வேண்டும்.

தொழில் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வோர் மட்டுமே இச்சான்றிழை சமர்ப்பிக்க வேண்டும். அவரில் தங்கி வாழ்வோர் அல்லது சுற்றுலா வீஸாவில் நாட்டுக்கு செல்வோருக்கு இப்புதிய நடைமுறை செல்லுபடியாகாது.

பாதுகாப்பான பேண்தகு அபிவிருத்தி மிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இப்புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் உலகில் பாதுகாப்பான நாடாக ஐக்கிய அரபு இராச்சியத்தை மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் உயர்மட்டக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435