வதிவிட சட்ட மீறிய 120,000 பேர்- கைதை பிற்போட்டது குவைத்!

வதிவிடச் சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அடுத்த மாதம் எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கை பிற்போடப்பட குவைத் உள்விவகார அமைச்சை மேற்கோள்காட்டி கட்டாரை தளமாக கொண்டு இயங்கும் அல்-ஜசீரா செய்தி வௌியிட்டுள்ளது.

ஏற்கனவே வதிவிட சட்டத்தை மீறி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படவிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் இந்நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்புக் காலத்தின் போது வதிவிட சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்தமையினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பொலிஸ் நிலையங்களும் கைதிகளால் நிரம்பியுள்ளதாகவும் எனவே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் அரச முகவர் நிலையங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எனவே இந்த ஆண்டு இறுதியளவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக பேசவல்ல அதிகாரியொருவர் தெரிவித்தார் என்று குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள், பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடைந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ளவர்கள் தவிர்ந்து 120,000 வௌிநாட்டவர்கள் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும். மீண்டும் ஒரு முறை பொது மன்னிப்புக் காலம் அவர்களுக்கு வழங்கப்படுமா என்பது குறித்த செய்திகள் இதுவரை வௌியாகவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435