தேசிய தின கொண்டாட்டங்கள் நிமித்தம் நாட்டில் உள்ள பல்தர வாகன நிறுத்தங்களைத் தவிர ஏனைய அனைத்து கட்டணம் செலுத்தி பயன்படுத்தப்படும் அனைத்து வாகன நிறுத்தங்களையும் இலவசமாக பயன்படுத்த முடியும் ஐக்கிய அரபு இராச்சிய வீதிகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
நாட்டின் தேசிய தினம், முகம்மது நபியின் பிறந்த தினம் மற்றும் ஞாபகார்த்த தினம் என்பவற்றை முன்னிட்டு அந்நாட்டின் அனைத்து தனியார் மற்றும் அரச துறைகளுக்கு நான்கு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இலவசமாக வாகனங்களை நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 4ம் திகதி வரையில் இவ்வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பல விசேட போக்குவரத்து ஒழுங்குளையும் அவ்வதிகாரசபை ஏற்படுத்திக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.