UAE யில் மூன்று நாள் பொது விடுமுறை இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித வளம் தொடர்பான பெடரல் அதிகாரசபை (The Federal Authority for Government Human Resources (FAHR) அறிவித்துள்ளது.
முகம்மது நபியின் பிறந்த தினம், அந்நாட்டு தேசிய தினம் மற்றும் நினைவு தினம் என்பனவற்றை கொண்டாடும் வகையிலேயே இப்பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் டிசம்பர் மாதம் 4ம் திகதி சேவைக்கு சமூகமளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனித வளம் தொடர்பான பெடரல் அதிகாரசபை (The Federal Authority for Government Human Resources (FAHR) அறிவித்துள்ளது.
முகம்மது நபியின் பிறந்த தினம், அந்நாட்டு தேசிய தினம் மற்றும் நினைவு தினம் என்பனவற்றை கொண்டாடும் வகையிலேயே இப்பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணியாற்றுபவர்கள் டிசம்பர் மாதம் 4ம் திகதி சேவைக்கு சமூகமளிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது