நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை பிரதிநிதி சரத் டேஸுக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி நீதி அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையின் புலப்பெயர்வாளர்களின் பிரச்சினைகள், அதனுடன் தொடர்புடைய சட்ட ரீதியான தன்மைகள் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இடம்பெறும் ஆட்கடத்தலை தடுத்தல், அது தொடர்பில் நிலவும் சட்ட ரீதியான தன்மைகள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தலினால் ஏற்பட்டுள்ள பாதக தன்மைகள் என்பன தொடர்பலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கமானது உச்சபட்ச ரீதியில் செயற்படுவதாக நீதியமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பானது இலங்கைக்கு உச்சபட்ச ரீதியில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதன் இலங்கைக்கான தலைவர் சரத் டேஸ் இதன்போது நீதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்
இலங்கை, 1990 ஆம் ஆண்டு புலம்பெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பில் அங்கத்துவம் பெற்றது. 2002ஆம் ஆண்டு அந்த அமைப்பு இலங்கையில் நிறுவப்பட்டது.