சட்டவிரோதமான முறையில் கப்பலுக்கு எண்ணெய் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு நைஜீரிய கட்ற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையின் 7 மாலுமிகளும் தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த 7 மாலுமிகளும் தற்போது நைஜீரிய பொருளாதார மற்றும் குற்றவியல் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காகவே குறித்த 7 பேரையும் அந்த ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முறையான அனுமதிப் பத்திரம் இன்றி 838 மெடரிக் தொன் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டே குறித்த 7 மாலுமிகளும் கைது செய்யப்பட்டதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.