குவைத்தில் பணிப்பெண்களுக்கு நுழைவு விசா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்..!!
பணிப்பெண்களுக்கு நுழைவு வீசா வழங்குமாறு கோரி ஆட்சேர்க்கும் அலுவலக உரிமையாளர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் பத்திரிகையான அல் – ஜரிடா இச்செய்தியை வௌியிட்டுள்ளது.
உலக நாடுகளில் கடுமையான தாக்கம் காரணமாக பல்வேறு முடக்கல் தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வௌிநாடுகளில் இருந்து தொழிலுக்காக ஆட்களை வரவழைக்கும் நடவடிக்கையும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இன்றுவரை அந்நாட்டில் உள்ள 420 ஆட்சேர்ப்பு அலுவலகங்களுக்கு 6,720,000 தினார் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறிய அலுவலகங்களில் 2,000 தினார்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் தாம் அதிக இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் குவைத் நீதித்துறையை நாடுவதற்கு முன்பாக தமது கோரிக்கையை தெரியப்படுத்தும் நோக்கில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.