
பனிமூட்டமாக காணப்படுவதால் சாரதிகள் கவனமாக வாகனமோட்டுமாறு ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
டுபாய், அபுதாபி உட்பட ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஏனைய நகரங்களில் பனிமூட்டமாக காணப்படுவதானால் வீதிகளில் பனி மறைப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வீதிகள் 500 மீற்றருக்கும் குறைவாகவே தெரிவதாகவும் மோட்டார் வாகன சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சில வீதிகளில் அதிகபடியான அவதானிப்புடன் வாகனத்தை ஓட்டுவது நன்மை பயக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.