
இலங்கை தூதரகத்தில் பஹ்ரைனில் விசேட கொன்சியுலர் தினத்தை நடத்த இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, நாளை (08) பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகத்தில் நாளை (08) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இவ்விசேட கொன்சியுலர் தினம் நடாத்தப்படவுள்ளது.
இத்தினத்தில் கடவுச்சீட்டு வழங்குதல், பிறப்பு, திருமண மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்தல், ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தல், அட்டோர்ணி தத்துவம் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.