பாலியல் மாற்று சிசிச்சை மாற்று சிகிச்சை மேற்கொண்டால் 10 000 தொடக்கம் 500,000 டினார் வரை அபராதம் விதிக்கப்படுவதுன் வைத்தியர் மற்றும் உதவி வழங்கியோருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
மத்திய மருத்துவ பொறுப்பு சட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் நேற்று (25) தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பெண்ணொருவர் பால்மாற்று சிகிச்சை செய்துக்கொள்வதற்காக விண்ணப்பத்துள்ளார். வரலாற்றில் முதற்தடவையாக பால்மாற்றுச்சிகிச்சைக்கு விண்ணப்பித்துள்ளார் என்று அபுதாபி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தான் ஆணாக உணர்வதாக குறித்த பெண் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதையடுத்து இது தொடர்பான விசாரணைகள் நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் கீழியங்கும் பொது சுகாதார கொள்கைகள் மற்றும் உரிமம் பிரிவின் செயலாளர் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேலைத்தளம்/கலீஜ் டைம்ஸ்