பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை தாதியரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில் சுமார் 42,000 தாதியர் வெற்றிடங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் பரீட்சைகளுக்கு தோற்றி தகமை பெற்ற ஆண் பெண் தாதியர்கள் மேற்படி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.