புலம்பெயர் இலங்கையருக்கான பாடசாலை சவுதியில் நிர்மானம்

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான அனைத்து வசதிகளும் கொண்ட சர்வதேச பாடசாலையொன்றை தலைநகரி ரியாத்தில் நிர்மாணிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சவுதி தூதுவர் அஸ்மி தாஸின் தெரிவித்துள்ளார்.

இளவரசர் பைசல் பின் பன்டாருடன் இணைந்து இப்பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே, மலாஸ் பிரதேசத்தில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கருத்திற்கொண்டு புதிய பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. புதிய பாடசாலையில் மைதானம், நீச்சல் தடாகம், ஆய்வகூடம், ஆரம்ப பிரிவு உட்பட அனைத்து வசதிகளுடன் புதிய பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே உள்ள பாடசாலையில் 1000 மாணவர்கள் கற்பதுடன் 65 ஆசியர்கள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435