வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடம் வரி அறவிடப்படுவதாக வௌியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதியமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பாதீட்டில் ஒரு வீத வரி வௌிநாட்டு பணியாளர்களிடமிருந்து அறிவிடப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளது. அத்தகவலில் எவ்விதமான உண்மையும் இல்லை. தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.