வௌிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நடைபெற்றது.
இலங்கை வௌிநாட்டு பணியகம் இச்சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதற்கமைய காலி மாவட்டத்தில் 10 பயனாளிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் 33 பயனாளிகளுக்கும் ஆரம்ப நிதியாக 25,000 ரூபா வழங்கப்பட்டது. குறித்த சுயதொழில் திட்டத்திற்கு காலி மாவட்டத்திற்கு 187,292.00 ரூபா நிதியும் மாத்தறை மாவட்டத்திற்கு 711,599.87 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டில் பணியாற்றி நாடு திரும்பும் இலங்கையருக்கு செயற்படுத்தும் இத்தகைய செயற்றிட்டங்கள் அவர்களை வலுப்படுத்த உதவும் என்று பணியகம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
T