புலம்பெயர் தொழிலாளர்களை வெளியேற்ற திட்டமிடுகிறதா சவுதி???

சவுதி அரேபியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட குடும்ப வரி விதிப்பானது புலம்பெயர் தொழிலாளர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

செளதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வரி முன்மொழிவுகளின்படி, வெளிநாட்டினர் ஒவ்வொருவரும், 2017 ஜூலை முதல் மாதந்தோறும் 100 ரியால்களும், 2018 ஜூலை முதல் மாதத்திற்கு 200 ரியால்களும், 2019 ஜூலை முதல் மாதந்தோறும் 300 ரியால்கள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஜூலை முதல் மாதந்தோறும் 400 ரியால்களும் வரியாக செலுத்தவேண்டும். அங்கு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் வரி செலுத்தப்பட்ட பின்னர் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் ஏற்படும் என்று சவுதியில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சவுதியில் பணிபுரியம் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், இதுவரை சம்பாதித்ததில் சிறிதளவேணும் சேமிக்கக்கூடியதாக இருந்தது. புதிய வரியினால் அதுவும் முடியாது. குழந்தை, குடும்பம் என்று வைத்து பராமரிப்பது மிகவும் கஷ்டம் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

மசகெண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பொருளாதார சிக்கல்களில் இருந்த மீள்வதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது புதிய வரிவிதிப்பை திணிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிஸி/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435