புலம்பெயர் தொழிலாளர்களின் தகவல் சேகரிப்பு

வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் எதிர்கால நலன்புரி திட்டங்களை தீட்டுவதற்கான தகவல்களை திரட்டும் பணிகளை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கமைய, வௌிநாட்டில் வேலை செய்யும் இலங்கையர்கள் தமது தகவல்களை www.slbfe.lk இணையதளத்தில் Census of Sri Lankan Migrant Workers என்ற பக்கத்தில் இருக்கும் விண்ணப்பப்படிவத்தை ஒன்லைன்னிலேயே பூர்த்தி செய்வதனூடாக குறித்த தகவல்களை வழங்க முடியும். வௌிநாட்டில் வேலைசெய்யும் அனைத்து இலங்கையர்களையும் குறித்த இணையதளத்தில் தமது தவறாது வழங்க வேண்டும் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது,

குறித்த தகவல்கள் வௌிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களின் நலன்புரி மற்றும் எதிர்கால திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த தகவல்கள் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படாது என்பதுடன் ரகசியத்தன்மை பேணப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை பணியகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தொடர்பிலக்கம் 011-2866002 ஐ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435