வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அவர்கள் தீவின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் 3 இலவச இரவு நேர வட்டார மருந்தகங்களில் சிகிச்சை பெறலாம்.
வெளிநாட்டு ஊழியர்களின் சுகாதார மருத்துவ தேவைகளுக்காக ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியில் இருந்து 13 வட்டார, வேலையிட மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் FWMOMCare என்ற செயலி மூலம் நடமாடும் மருந்தக குழுக்கள், தொலைமருத்துவம் ஆகியவையும் அந்த நிலையங்களுக்கு வலு சேர்ப்பதாக மனிதவள அமைச்சு ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்று குழுமம் கண்டறியப்பட்டால் நடமாடும் மருந்தக குழுக்களும் பணியில் இறக்கப்படும்.
புதிய இரவு நேர மருந்தகங்கள் மாலை 6.30 முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுவதுடன், ஊழியர்கள் மருத்துவர்களைப் பார்த்து நேரடி ஆலோசனையும் பெற்றுக்கொள்ளலாம்.