சவுதி புலம்பெயர் தொழிலாளர்களது கடவுச்சீட்டு அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு வழங்கத் தவறும் தொழில்வழங்குநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
தொழிலாளரின் எழுத்து மூலமான சம்மத்துடன் கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கலாம் என்றும் அவ்வாறில்லையேல் 2000 சவுதி ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்றும் இவ்வறிவித்தலின் பின்னர் உடனடியாக செயற்பட தவறின் அபராதம் இரட்டிப்பாக அறிவிடப்படும் என்றும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சவுதியில் பணியாற்றும் இலங்கையர்கள் புதிய சட்டம் தொடர்பில் தெரிந்து வைத்திருப்பதுடன் உங்கள கடவுச்சீட்டை நீங்களே பத்திரமாக வைத்திருப்பது உங்கள் உரிமை என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.