வௌிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையருக்கு நெருக்கடி!

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்ததன் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு சந்தையில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமை தோன்றியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும் இலங்கையர்களின் அடிப்படை சம்பளத்தில் அரசாங்கம் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கு 450 அமெரிக்க டொலராகவும், பயிற்சியற்ற பணியாளர்களுக்கு 350 அமெரிக்க டொலராகவும் அடிப்படை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை சந்தையில் பாரிய போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணியாளர்களை பணிக்கும் அனுப்பும் சந்தையில் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் இலங்கைக்கு தற்போதே பாரிய போட்டி காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சில நாடுகள் 230 முதல் 290 அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ள நிலையில், கடந்த ஆண்டில் 300 அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையர்களின் அடிப்படை சம்பளம் 350 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தின் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய போட்டித் தன்மை குறித்து அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் எம்.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435