வெளிநாடுகளில் பணி புரிபவர்களின் மூலமே இந்த நாட்டிற்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்தது. அவர்களிடமிருந்து மாதாந்தம் கிடைத்த வருமானம் நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல்இ அவர்களை இலங்கைக்குக் அழைத்து வரவும் வேண்டி ஏற்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களனி கங்கை வலது கரை நீர் விநியோக திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நேற்று (18) திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலட்சக் கணக்கானோர் வாழ்ந்த சுற்றுலாத் துறை முடங்கியுள்ளது. ஆடைத் கைத்தொழில் ஒரு வாரத்தில் பின்னோக்கி சென்றது. மீன்பிடித் துறை ஒரே இரவில் சரிந்தது. போக்குவரத்து சேவை சரிந்துவிட்டதுஇ இவற்றில் தங்கி வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உதவியற்றவர்களாக மாறிவிட்டனர். வீதியோர விற்பனைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்தும் செயலிழந்தன.
இவ்வாறானதொரு நிலையிலுள்ள நாட்டில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பில்லியன் டொலர் கடனை எம்மால் திருப்பிச் செலுத்த முடியாது போகும் என்று எதிர்க்கட்சி நினைத்தது.
அரசாங்க செலவினங்களைக் குறைத்தும், தேவையற்ற பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியதால் நாங்கள் அந்தக் கடனை செலுத்தினோம். இந்த பில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் செலுத்த முடியாது என்று அவர்கள் பந்தயம் கட்டினர். ஆனால் இந்த வருவாய் இழப்புகளின் மத்தியில் அந்த ஒரு பில்லியன் டொலர் கடன் தவணையை சரியான நேரத்தில் செலுத்தினோம்.
வெளிநாடுகளில் பணிபுரிவோரின் வருமான இழப்பு மற்றும் சுற்றுலாஇ மீன்வளம், போக்குவரத்து போன்றவற்றிலிருந்து அன்றாட வருமானம் அனைத்தையும் இழந்த போதிலும், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பி.சி.ஆர் சோதனைகளைச் செய்ய நூற்றுக்கணக்கான மில்லியன்களை ஒதுக்க வேண்டும். பிற நாடுகளில் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்காது நோயாளிகளை காப்பாற்ற வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல்இ இந்த நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
15 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல்இ கையடக்க தொலைப்பேசிகளுக்கு விதிக்கப்படும் 25 வீத வரி முதல் மக்களை பாதிக்கும் 13 வகையான வரிகளை அறவிடாதுஇ கருவூலத்திற்கு கிடைக்கும் அனைத்து வருவாய்களையும் விட்டுக்கொடுப்பதன் மூலம் மக்களுக்கு இதுபோன்ற நிவாரணங்களை வழங்க வேண்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.