பெண்களை வௌிநாடு அனுப்புவதை முற்றாக தடை செய்ய நடவடிக்கை

இலங்கை பெண்களை வௌிநாட்டு வேலைவாய்ப்புக்காய் அனுப்புவது எதிர்காலத்தில் முற்றாக தடை செய்ய வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ.எம் அமீர் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பினூடாக இலங்கை ஏழாயிரம் பில்லியன் ரூபா வருமானத்தை வருடாந்தம் பெற்றுக்கொள்கிறது. வருமானம் ஈட்டும் நோக்கில் பெண்கள் வௌிநாடு செல்வதனால் குடும்பம் பாதிப்படைவது மாத்திரமன்றி பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் பெண்கள் வௌிநாடு செல்வதை முற்றாக தடை செய்து நன்கு தேர்ச்சியடைந்த ஆண்களை அதிக சம்பளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமன்றி, மலேசியா, கொரியா, இத்தாலி, சைப்ரஸ் போன்ற நாடுகளுக்கும் பயிற்சி பெற்றவர்களை அனுப்ப முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435