மத்திய கிழக்கிற்கு சென்ற இரண்டு பெண்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை

லெபனான் மற்றும் ஜோர்தான் முதலான மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பிற்காக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி ஓப்பநாயக்க – பஹல இலுக்கும்புற பகுதியைச் சேர்ந்த பெருமாள் காளியம்மாள் மற்றும் மொரட்டுவை – கட்டுபெத்த பகுதியைச் சேர்ந்த சுமித்ரா நில்மினி பெர்னாண்டோ ஆகியோர் தொடர்பிலேயே எவ்வித தகவல்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி ஜோர்தான் சென்ற பெருமாள் காளியம்மாள் என்ற பெண் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.

அத்துடன், 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி லெபனான் சென்ற சுமித்ரா நில்மினி குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இரண்டு பெண்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவின் 0112 864 100 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435